×

குளச்சலில் பரபரப்பு சுயஉதவிக்குழுவில் கிடைத்த பணத்தில் ₹500 கள்ளநோட்டு மீன் வாங்க வந்த தந்தை-மகனிடம் விசாரணை

குளச்சல், டிச.15: குளச்சலில் மீன்வாங்க வந்த தந்தை-மகன் கொடுத்த S500 கள்ளநோட்டை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளச்சல்  மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் குவிவது வழக்கம்.நேற்றுமுன்தினம் ரீத்தாபுரத்தை சேர்ந்த தந்தை-மகன்  மீன் வாங்கி வந்தனர். அவர்கள் ஒரு வியாபாரியிடம் மீன் வாங்கிவிட்டு S500  நோட்டை கொடுத்து உள்ளனர். ரூபாய் நோட்டை பார்த்ததும் வியாபாரிக்கு  சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த ேநாட்டை ஆய்வு செய்தார். அப்போது அது  கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இது குறித்து குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வந்து தந்தை, மகனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று  விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சுயஉதவி குழுவில் இருந்து  கிடைத்த பணம் என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் எழுதி  வாங்கிவிட்டு விடுவித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல்  கடந்த சில தினங்களுக்கு முன்பு குழித்துறையில் மதுக்கடையில் மது வாங்கிய  ஒருவர் S200 கள்ள நோட்டை கொடுத்தார். சமீப காலமாக இதேபோல் அடிக்கடி கள்ள நோட்டுகள் சிக்கி வருகின்றன. எனவே பெரிய அளவிலான கள்ள நோட்டு கும்பல்கள் குமரி மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ளதா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

Tags : Kulachal ,
× RELATED குளச்சலில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்